மலைவாழ் மக்களை அரசாங்க பணம் சென்றடையவில்லை, விஜய் சென்றடைந்திருக்கிறார்
மலைவாழ் மக்களை அரசாங்க பணம் சென்றடையவில்லை, விஜய் சென்றடைந்திருக்கிறார்
மலைவாழ் மக்களை அரசாங்க பணம் சென்றடையவில்லை, விஜய் சென்றடைந்திருக்கிறார் கேரளாவில் உள்ள மலைவாழ் மக்களை அரசாங்கத்தின் பணம் உள்பட எதுவும் சென்றடையவில்லை, ஆனால், நடிகர் விஜய் சென்றடைந்திருக்கிறார் என கேரளா பாலக்காட்டில் உதவி கலெக்டராக இருக்கும் உமேஷ் கேசவன் கூறியுள்ளார்.
கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளது தெரிந்ததே. கேரளாவில் பழங்குடியினர் வசிக்கும் அட்டாப்பாடி பகுதிக்கு உமேஷ் கேசவன் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதி எதுவும் இல்லை. சாலை, தெருவிளக்கு, கழிப்பறை என்று அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. குழந்தைகளுக்கு பள்ளியில் படிக்க விருப்பமில்லை. படித்து எதுவும் ஆகப்போவதில்லை என்ற ஆழ்ந்த கசப்பு அவர்களுக்கு இருக்கிறது.
அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பில் இருக்கும் அம்மக்கள் விவசாய வேலை இல்லாத நாள்களில் டிவியில் விஜய் படத்தைப் பார்த்து பொழுதுபோக்குவதாக உமேஷ் கேசவன் கூறியுள்ளார். அரசாங்கத்தின் கோடிக்கணக்கான பணம் அம்மக்களை சென்றடையவில்லை, அவர்களை சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் விஜய் என்று அவர் கூறியுள்ளார்.
அட்டப்பாடி பழங்குடி மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த விஜய்யை அழைத்துவர விஜய் அலுவலகத்தை தொடர்பு கொண்டிருக்கிறது பாலக்காடு கலெக்டர் அலுவலகம்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்