’’பாகுபலி ’’ ஹீரோ பிரபாஸ் ரூ. 1கோடி நிதி உதவி ...

வியாழன், 26 மார்ச் 2020 (21:00 IST)
’’பாகுபலி ’’ ஹீரோ பிரபாஸ் ரூ. 1கோடி நிதி உதவி

கொரோனா பாதிப்பால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து பல உதவிகளை செய்துவருகிறது. மாநில அரசுகளுக்கும் கை கொடுத்துவருகிறது.

இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.
 
ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் நிதி உதவி வழங்கிய நிலையில் , சிரஞ்சீவியின் தம்பியும்  ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் பவன் கல்யான் ரூ.2 கோடி உதவி அளித்துள்ளார்.  அதில், ஆந்திரா ம் தெலுங்கான மாநிலங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அளிப்பதாகவும்,மேலும்  ரூ. 1 கோடி நிதியை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாகுபலி 1, 2 , சாஹோ ஆகிய படங்களில் கம்பீரமாக நடித்து இந்தியா முழுவதிலும் ரசிகர்களைச் சம்பாதித்துள்ள நடிகர் பிரபாஸ்  கொரொனா பாதிப்புக்காக ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநில அரசு நிவாரண நிதியில் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கேத்ரின் தெரசாவின் கலர்ஃபுல் போட்டோஸ்!