தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி - விஜயபாஸ்கர் தகவல் !
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 209284 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 2464 பேருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், 13727 பேருக்கு தனிமை வார்டுகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 284 பேர் மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும், 1039 பேருக்கு கொரோனா மாதிரிகள் சோதிகப்பட்டுள்ளதாகவும், அதில் 26 பேருக்கு உறுதி எனவும், இதில் ஒருவர் குணமடைந்தது போக, 933 பேருக்கு கொரொனா பாதிப்பு இல்லை , 80 பேருக்கு சோதனை முடிவு வராதவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது :
துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 27 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரானாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.