Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடைந்த கையுடன் உதவிக்கரம் நீட்டும் அமலாபால்!

Advertiesment
உடைந்த கையுடன் உதவிக்கரம் நீட்டும் அமலாபால்!
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:45 IST)
படப்பிடிப்பின் போது காயம் அடைந்து, கை உடைந்த நிலையிலும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் அமலாபால்க்கு பாராட்டுக்கள் குவிந்து  வருகின்றன.
சிந்து சமவெளி ஆனாலும், மைனா படம் மூலம் தமிழ் ரசிகர்களை அமலா பால் வெகுவாக கவர்ந்தவர். அதன் பின்னர் 'தெய்வத் திருமகள்', 'வேட்டை', காதலில்  சொதப்புவது எப்படி', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட  மொழிகளிலும் நடித்து வருகிறார். 
 
அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில், 'அதோ அந்த பறவை போல' என்னும் படத்தில் அமலா பால் நடித்துவருகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக அமலாபாலுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது சிகிச்சை  பெற்று வருகிறார்.
 
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கேராளாவில் பெய்த கன மழையால் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக நடிகை அமலா பால், தேவையான உணவுப் பொருள்களை தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் தேடிச்சென்று  உதவிகளை வழங்கி வருகிறார். அமலாபாலின் இந்த  செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
 
தற்போது, அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அமலா பாலின் இந்த செயலுக்கு, திரை உலகினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி, வாஜ்பாய் குறித்து கஸ்தூரி சர்ச்சை டுவிட்...