கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஹெனன் என்பவர் தனது குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்றதை நெட்டிசன்கள் கேலி செய்தது அறிந்ததே. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த ஹெனனை நேரில் அழைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று கூறி அந்த மாணவிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது கேரள மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் அதே கல்லூர் மாணவி ஹெனன் தற்போது ரூ.1.5 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்த பணம் அவர் மீன்விற்று சேமித்து வைத்த பணம் என்பது குறிப்பிடத்தக்கது
கல்லூரி சீருடையுடன் மீன் விற்றதை புகைப்படம் போட்டு கேலியும் கிண்டலும் செய்த அதே நெட்டிசன்கள் இன்று அந்த கல்லூரி மாணவியை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி மாணவி ஹெனன் கூறியபோது, 'மக்களில் சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்களிடம் பெற்ற நன்கொடையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு ரூ.1.5 லட்சத்தை திருப்பி செலுத்துகிறேன் என்று கூறினார்.