Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

HDB விஜய்...மக்களுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்...

Advertiesment
HDB விஜய்...மக்களுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்...
, செவ்வாய், 22 ஜூன் 2021 (16:58 IST)
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு  அவரது ரசிகர்களுக்கு உதவி செய்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கடந்த வாரம் முதலாய் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட் வெளியாகியுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்சன் இயகக்த்தில் விஜய் நடித்துள்ள விஜய்65  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் திரைநட்சத்திரங்கள் மற்றும் நெட்டிசன்களின் பேச்சு எல்லாம் விஜய்யின்  விஜய்65 படம் குறித்தே உள்ளது. அதேபோல் நடிகர் விஜய்க்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்’’ தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நடிகர் விஜய்யின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசரடி பெட்ரோல் பங்க் மாற்றுத்திறனாளிகள், முன்களப் பணியாளர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும்,15 பேருக்கு 50 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் வழங்கினர். இதற்கு பலதரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

HBD நடிகை தேவயானி,,,ரசிகர்கள் வாழ்த்து மழை