Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவாரியில் ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு நடனமாடி அசத்திய ஆர்த்தி !

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (08:45 IST)
நடிகை ஆர்த்தியின் ரகிட்ட ரகிட்ட நடனம்

தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.

ஆர்த்தியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்து வ்ருகின்றனர். பிரபலங்கள் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஆர்த்தி தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வரும் ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு கணவர் கணேஷுடன் சேர்ந்து குவாரியில் நடனமாடிய வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார். ஆர்த்தியின் செம கியூட்டான இந்த நடனம் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments