Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணம் கட்டுபவர்கள் ஹிந்தி படிக்கலாம், பாமரர்கள் படிக்கக் கூடாதா? நடிகை ஆர்த்தி ஆவேசம்

Advertiesment
பணம் கட்டுபவர்கள் ஹிந்தி படிக்கலாம், பாமரர்கள் படிக்கக் கூடாதா? நடிகை ஆர்த்தி ஆவேசம்
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (20:43 IST)
கடந்த சில நாட்களாக ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற டீசர்ட் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஆர்த்தி இதுகுறித்து தனது ஆழமான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன்னர் ரசிகர் ஒருவர் ஆர்த்தியிடம் கேள்வி எழுப்பியபோது ’ஹிந்தி படித்து எந்த நாட்டின் அதிபராக இருக்கின்றாய்? இங்கே பேசுவது அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை எதிர்க்கும் முனைப்பு என்பதைக்கூட தெளிவில்லாமல் இருக்கின்றாயே?என்று கூறியுள்ளார்
 
இதற்கு பதிலளித்துள்ள ஆர்த்தி ’எந்த நாட்டுக்கும் அதிபராக இந்தி மட்டும் முக்கியமில்லை என்ற தெளிவு கூட இல்லாமல் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று கூறிவிட்டு, ‘பணம் கட்டி பணக்காரர்கள் இந்தி படிக்கலாம் ஆனால் இலவசமாக பாமரர்களுக்கு இந்தி கிடைக்கக் கூடாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ஆர்த்தியின் இந்த கேள்வி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்பிபி குறித்து ஊடகங்களில் பொய்யான தகவல்கள்: எஸ்பிபி சரண் வருத்தம்