Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னை தானே ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்ட நடிகை ஆர்த்தி !

தன்னை தானே ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்ட நடிகை ஆர்த்தி !
, புதன், 8 ஏப்ரல் 2020 (16:16 IST)
தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.

ஆர்த்தியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்து வ்ருகின்றனர். பிரபலங்கள் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குட்டி யானையின் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னை தானே ட்ரோல் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்று நோயால் உயிரிழந்த தொலைக்காட்சி நடிகை!