Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 20 April 2025
webdunia

ஊடல், கூடலோடு...அழகாக காதலை சொன்னால்! அது கௌதம் மேனன்!

Advertiesment
Gautham Menon
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (18:06 IST)
ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா, வசீகரா என் நெஞ்சினிலே , கடலினில் மீனாக மிதப்பவள் நான், என உருகி உருகி காதலை சொன்னால் அது கௌதம வாசுதேவ் மேனன். இவர் 1973ம் ஆண்டு பிப்ரவரி 25ம்தேதி இதே நாளில் தான் பிறந்தார்.

 
2001ம் ஆண்டு மின்னலே என்ற ரொமான்டிக் படம் மூலம் திரை உலகில் இயக்குனராக அறிமுகம் ஆனார் கௌதம மேனன்.
 
அதன் பிறகு சூர்யாவுடன் காக்க காக்க,  கமலுடன் வேட்டையாடு விளையாடு, மீண்டும் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அஜித்துடன் என்னை அறிந்தால் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களில் பெரும்பாலானவை காதலை முதன்மையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். பொதுவாக கௌதம் மேனன் படம் என்றாலே ஆங்கிலம் கலந்த வசனங்கள், கூடுதலான ரொமான்ஸ் காட்சிகள், உருகவைக்கும் பின்னணி இசை, அற்புதமான காதல் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். மேலே சொன்ன எல்லா படங்களிலுமே இவை நீக்கமற நிறைந்திருக்கும். 

webdunia

 
இவர் தெலுங்கிலும் ஹிந்தியிலும் குறிப்பிட்ட அளவு படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிய கௌதம் மேனன், தனுசுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் நிதிப்பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. இதுதவிர துருவ நட்சத்திரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2 ஆகிய படங்களை இந்த ஆண்டு இயக்கி வருகிறார்.  படத்தின் கதையில், காதலை ரொமான்ஸ் கலந்து சொல்லி வெற்றி பெற்ற இயக்குனர்களின் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமானவர். அவருக்கு அவரது ஸ்டைலிலேயே பிறந்தநாள் வாழ்த்து சொல்வதென்றால் இதுவரைக்கும் இவ்வளவு அழகாக காதலை சொல்வதில் உங்களை போன்று யாரும் இல்லை... இன்னும் நிறைய படங்களை நீங்கள் இயக்க வேண்டும்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பில்லா ஹீரோஸ் மீட்டிங்: ஹைதராபாத் ஹாட் டாக் இதுதான்...