Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிட் படத்தின் பார்ட் 2 வை கையில் எடுக்கும் ஹெச் வினோத்!

ஹிட் படத்தின் பார்ட் 2 வை கையில் எடுக்கும் ஹெச் வினோத்!
, திங்கள், 23 அக்டோபர் 2023 (07:53 IST)
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத், அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற ஹிட் படத்தை கொடுத்தார். அதன் பிறகு வரிசையாக அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களை இயக்கியவர், இப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

அந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இப்போது கமல் படத்துக்கான திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் வினோத், அடுத்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் இரண்டு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக ஹெச் வினோத் தனுஷை வைத்து ஒரு படத்தை அடுத்து இயக்குவார் என சொல்லப்பட்டது. அந்த படம் தாமதம் ஆவதால் தீரன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவன் இசையோடு விஜய் 68 படத்தின் பூஜை வீடியோ கம்மிங் சூன்!