தமிழ் சினிமா நடிகர்களில் தற்போது மிகவும் பிஸியாக இருப்பவர்களில் ஜி.வி.பிரகாஸும் ஒருவர். அடுத்தடுத்து 'சர்வம் தாளமயம்', 'ஐங்கரன்', '4ஜி', 'அடங்காதே', 'குப்பத்துராஜா', 'செம', '100% காதல்' என அவரது கால்ஷீட்டில் பல படங்கள் காத்திருப்பில் உள்ளன. அடுத்த 2019 டிசம்பர் வரை ஜி.வி.பிரகாஷிடம் வேறு படங்களில் நடிப்பதற்குத் தேதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரை இந்தி படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.
பாலா இயக்கியத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், அவரின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் "உங்களுக்கு ஏற்ற கதை ஒன்று வைத்திருப்பதாக கூறி, இந்திக்கு வாருங்கள் சேர்ந்து பணியாற்றலாம்" என்று அழைத்திருக்கிறார்.
"இப்போது தமிழில் நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு பாலிவுட் வருகிறேன்" என்று ஜி.வி.பிரகாஷும் அனுராக் காஷ்யப்புக்கு பதில் கூறியதாக கூறப்படுகிறது. இந்தியில் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.