Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

GV Prakash

Siva

, வியாழன், 4 ஜூலை 2024 (18:57 IST)
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்த நிலையில் வெற்றிமாறன் படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வெற்றிமாறன் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் மற்றும் சாயாதேவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சார். இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்து இசை அமைப்பில் விவேக பாடல் வரிகளில் உருவான படங்கள் பனங்கருக்கா என்ற இந்த பாடலை ஜிவி பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டதற்கு முன்பே இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை என்றாலும் நாளை இந்த பாடல் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. 
 
சிங்கிள் பாடலில் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி, வாழ்க்கையிலும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!