Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியாகியுள்ளது!

Advertiesment
GV Prakash kumar

J.Durai

, திங்கள், 24 ஜூன் 2024 (10:41 IST)
'மகாநடி’, ‘சீதா ராமன்’ போன்ற படங்களின் வெற்றிக்காக நடிகர் துல்கர் சல்மான் பான் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
 
இப்பொழுது அவருடைய நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ படம் வெளியாக உள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
 
சமீபத்தில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசரில் துல்கர் சல்மானின் வசீகரிக்கும் தோற்றம் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது, படத்தில் இருந்து தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் சிங்கிள் ’கொல்லாதே’ பாடலை  படக்குழு வெளியிட்டுள்ளது. 
 
'கொல்லாமல் கொல்லாதே கோவக்காரி...
கண்ணாலே சொன்னேனே நூறு சாரி...’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடகர்கள் ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன் இருவரும் அழகாகப் பாடியுள்ளனர். 
 
பாடல் வசீகரிக்கும் வயலின் பகுதிகளுடன் தொடங்கி, புல்லாங்குழல் மெல்லிசையாக மாறி, டிரம் பீட்களால் மெருகேற்றி இசையமைப்பிற்கு கம்பீரத்தை சேர்த்துள்ளது. 
 
கோபத்தில் இருக்கும் மனைவியின் மீதுள்ள கணவரின் பாசத்தை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு பாடல் வரிகளாக எழுதியுள்ளார்.
 
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் லைவ் ஆர்கெஸ்ட்ரேஷனை இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார். முக்கியமாக புல்லாங்குழல் மற்றும் ஸ்டிரிங்க்ஸ் கொண்டு தம்பதியினரிடையே அன்பின் வெளிப்பாட்டை இந்த மெல்லிசையில் கொண்டு வந்துள்ளார். 
 
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் அமைக்கப்பட்ட, ’லக்கி பாஸ்கர்’ ஒரு சாதாரண வங்கி காசாளரின் எப்படி அசாதாரண வெற்றிப் பெறுகிறார் என்பதைப் படமாகக் காட்டுகிறது. 
 
பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி அற்புதமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். திறமைமிகுந்த பங்களான் தயாரிப்பு வடிவமைப்பில் பணியாற்றி உள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தின் எடிட்டிங்கைக் கையாண்டுள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.
 
ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சாய் துர்கா தேஜின் #SDT18 திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது!!