ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் ஃபர்ஸ்ட் லுக்! – இன்று வெளியீடு!

திங்கள், 7 அக்டோபர் 2019 (12:26 IST)
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் தொடங்கி மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் எழில். விஜய், அஜித் தொடங்கி சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட இளம் நடிகர்கள் வரை பலரை வைத்து படம் இயக்கியவர் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் இணைந்துள்ளார்.

ஐயங்கரன், 100% காதல் படங்களை தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் காமெடி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாக சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறார். நிகிஷா படேல், சதீஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சித்தார்த் வெளியிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் துருவ் விக்ரமின் ‘வர்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!