Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு நாட்களில் பிகில் டீசர் அப்டேட்!?- ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்

இரண்டு நாட்களில் பிகில் டீசர் அப்டேட்!?- ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்
, சனி, 5 அக்டோபர் 2019 (19:07 IST)
விஜய் நடித்து அட்லீ இயக்கியுள்ள பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்க, டீசர் குறித்த செய்தியை இரண்டு நாட்களில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

விஜய் – அட்லீ கூட்டணியில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்தது. மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படங்கள் விஜய் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மூன்றாவதாக இந்த கூட்டணி இணைந்திருக்கும் ‘பிகில்’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் வார்த்தை வீடியோவாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், எப்போது டீசரை வெளியிடுவீர்கள் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை ட்விட்டரில் ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் பிகில் டீசர் வெளியீட்டு தேதியை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார். இதனால் திங்கட்கிழமை வெளியாக இருக்கும் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கிடக்கிறார்கள். பிகில் டீசர் குறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஆபரேஷன் அரபைமா’ படத்தின் கேலரி...