Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

Advertiesment
Guruvayur ambalanadaiyil

Prasanth Karthick

, ஞாயிறு, 30 ஜூன் 2024 (12:44 IST)
சமீபமாக மலையாளத்தில் வெளியாகும் பல படங்களும் தமிழில் டப் ஆகி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அவ்வாறாக தற்போது ட்ரெண்டாகியுள்ள ஒரு மலையாள படம்தான் ‘குருவாயூர் அம்பலநடையில்’



வினு (பாசில் ஜோசப்) துபாயில் வேலைபார்த்து வரும் கேரள இளைஞர். இந்தியாவில் இருக்கும் ஆனந்தன்(ப்ரித்வி ராஜ்), வினுவுடன் நட்பாக பழகிய நிலையில் ஆனந்தன் தன் தங்கை அஞ்சலியை வினுவுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். வினு அவன் கல்லூரி படிக்கும்போது பார்வதி என்ற பெண்ணை காதலித்திருக்க அந்த லவ் ப்ரேக் அப் ஆன விரக்தியில் இருந்து அப்போதுதான் வெளிவந்திருப்பான். அதுபோல ஆனந்தனும் தனது மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வினு முயற்சி செய்து இருவரையில் துபாயில் இருந்தபடியே சேர்த்து வைக்கிறான்.

திருமணத்திற்காக வினு துபாயில் இருந்து திரும்பி வரும்போதுதான் தெரிகிறது, வினுவின் முன்னாள் காதலி பார்வதிதான் ஆனந்தனின் மனைவி என்று. ஆனால் ஆனந்தன் மீது பாசம் கொண்ட வினு இந்த உண்மைகளை சொல்லாமல் எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என பல முயற்சிகளை செய்ய ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் எதுவும் அவன் நினைத்தது போல நடக்கவில்லை. அதற்குள் ஆனந்தனின் தங்கை அஞ்சலி, வினு மீது காதல்க்கொள்ள தொடங்குகிறாள்.


இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணத்திற்கு தயாராகும் நிலையில் வினு திருமணத்தை நடத்துவதற்காக முன்பு செய்த தவறுகள் எல்லாம் விஸ்வரூபம் எடுக்கிறது. ஆனந்தனுக்கும் வினு பற்றிய உண்மை தெரிய வருகிறது. இந்த இக்கட்டுகளில் இருந்து தப்பித்து அஞ்சலியை வினு கரம் பிடித்தானா என்பதை கலகல காமெடி கதையாக சொல்லியிருக்கிறார் விபின் தாஸ். இவர் முன்னதாக இயக்கி வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஹே’ படமும் காமெடி படமாக பெரும் ஹிட் அடித்தது.

ப்ரித்விராஜ், பாசில் ஜோசப் இருவரும் மாமன், மச்சானாக பழகுவதிலும், எதிரிகளாக அடித்துக் கொள்வதிலும் காமெடியை அள்ளித் தெளித்துள்ளனர். பார்வதி கேரக்டரில் வரும் நிகிலா விமலுக்கு வசனங்கள் நிறைய இல்லை என்றாலும் முகபாவங்களிலேயே எளிதாக உரையாடுகிறார். இந்த திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!