Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் மேட்ச்சுக்கு கூட இவ்ளோ வரல..! – புதிய சாதனை படைத்த இந்தியா, நியூசிலாந்து போட்டி!

Advertiesment
ICC Worldcup
, திங்கள், 23 அக்டோபர் 2023 (12:21 IST)
நேற்று நடந்த இந்தியா – நியூசிலாந்து உலக கோப்பை போட்டி அதிகமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.



உலக கோப்பை ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் கோலாகலமாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியை இந்தியா பந்துவீச்சில் கட்டுப்படுத்தியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 273 ரன்கள் மட்டுமே பெற்றது. அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி தனது அபாரமான ஆட்டத்தால் 48வது ஓவரிலேயே 274 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

நியூஸிலாந்தின் 5 விக்கெட்டுகளை அதிரடியாக வீழ்த்திய ஷமி ஆட்டநாயகன் ஆனார். நேற்று நடந்த இந்த போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலி மூலம் சுமார் 4.3 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுவரை உலக கோப்பை லைவில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட மேட்ச்சாக இது சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது ஒரே நேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்கள் அந்த மேட்ச்சை பார்த்தனர். அந்த ரெக்கார்டை நேற்றைய மேட்ச் முறியடித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த போட்டிக்கு பிறகு தோனி சிறு குழந்தை போல அழுதார்… சஞ்சய் பாங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!