Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

vinoth
சனி, 30 நவம்பர் 2024 (15:12 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக படத்தில் இடம்பெற்றிருந்த குணா படத்தில் இடம்பெற்ற“கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடல் அமைந்தது. படத்தின் உச்சகட்ட காட்சியில் அந்த பாடலை மிகச்சரியாக பொறுத்தி ரசிகர்களை மயிர்கூச்செறிய செய்திருந்தார் இயக்குனர்.

அதனால் அந்த பாடல் மற்றும் குணா திரைப்படம் தற்போதைய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கவனம் பெற்றது. இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி இந்த படத்தை ரி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏனோ அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் குணா படத்தை ரி ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதன்பின்னர் வழக்கு முடிந்து நேற்று இந்த படம் ரிலீஸாகியுள்ளது.

டிஜிட்டலில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் ரிலீஸாகியுள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. குணா படம் முதல் ரிலீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்ற நிலையில் தற்போது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments