Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லப்பர் பந்து படத்தைப் பார்த்து பாராட்டிய விசிக தலைவர் திருமா வளவன்!

vinoth
புதன், 9 அக்டோபர் 2024 (07:19 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படம் வெளியான பின்னர் கார்த்தியின் மெய்யழகன் மற்றும் தேவரா போன்ற பெரிய படங்கள் ரிலீஸானாலும் இன்னமும் இந்த படத்துக்குக் கூட்டம் குறையவில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பார்த்துப் பாராட்டியுள்ளார். படம் சம்மந்தமாக அவர் பேசும்போது “கிரிக்கெட் வீரர்களை தேசிய அணிக்காக தேர்வு செய்வதில் சாதி உள்ளது. வட இந்தியா, தென்னிந்தியா மற்றும் இந்தி பேசும் மாநிலங்கள் என அடையாள அரசியல் உள்ளது.  கிராமப்புறங்களில் கிரிக்கெட் விளையாட்டில் சாதி முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதை லப்பர் பந்து படம் காட்டியுள்ளது.” எனப் பாராட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார் சாச்சனா.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்யும் அதிரடி..!

’சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் திருமணம்.. சீரியல் நடிகையுடன் நிச்சயதார்த்தம்..!

மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பதில் காமெடி நடிகரா? பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

'நவ்ரஸ் கதா காலேஜ்' திரைப்படத்திற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வித்தியாச மான விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments