தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.
6 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டமணி எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் கதாநயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடுக்கிறார். பழனிச்சாமி வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி வருகிறார்.
கவுண்டமணி பெரிதாக ஊடகங்களில் நேர்காணல்கள் கொடுப்பதில்லை. அவரைப் பற்றி அவருடன் பணியாற்றிய சகக் கலைஞர்கள் சொன்னால்தான் உண்டு. அந்த வகையில் பிரபல இயக்குனரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா கவுண்டமணி பற்றி தகவல் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ”ஒருமுறை கவுண்டமணிக்கு உடம்பு சரியில்லை என தகவல் வந்தது. உடனே நான் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தேன். அப்போது அவர் எவனோ எனக்கு உடம்பு சரியில்லன்னு கெளப்பி விட்டுட்டான். இப்ப சொந்தக்காரங்க எல்லாம் லாரில வந்துட்டு இருக்கானுங்க. அவனுங்க எல்லாத்துக்கும் நான் சாப்பாடு போடனும்” என ஜாலியாக பேசியதாக தெரிவித்துள்ளார்.