Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித், கமல், விஜய் சேதுபதி என பயணமாகி கடைசியில் விஜய்க்கு ஓகே ஆன ஹெச் வினோத் கதை!

அஜித், கமல், விஜய் சேதுபதி என பயணமாகி கடைசியில்  விஜய்க்கு ஓகே ஆன ஹெச் வினோத் கதை!

vinoth

, திங்கள், 16 செப்டம்பர் 2024 (09:48 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. படம் இதுவரை 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் ஒரு போஸ்டரோடு வெளியானது. அந்த போஸ்டரும் ஹெச் வினோத் கடந்த ஆண்டு இயக்க இருந்த கமல்ஹாசனை வைத்து இயக்க இருந்த ஹெச் வினோத் திரைப்பட போஸ்டரும் ஒரே மாதிரியாக இருந்தது. இதனால் அந்த கதைதான் தற்போது விஜய்க்காக மாற்றப்பட்டுள்ளதா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்தக் கதையைதான் முதலில் ஹெச் வினோத் அஜித்துக்கு சொன்ன கதை என்றும், அவர் நிராகரித்ததால் அதன் பின்னர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் எனப் பயணமாகி கடைசியில் விஜய்க்காக தற்போது படமாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட புகாரில் மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!