Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் படத்தின் வட இந்திய ரிலீஸ் உரிமைகளைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

கோட் படத்தின் வட இந்திய ரிலீஸ் உரிமைகளைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

vinoth

, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:27 IST)
விஜய் நடித்துள்ள கோட் (the greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. படத்தின் வியாபாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமயை ஜி நிறுவனமும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் வட இந்திய மொழிகளுக்கான ரிலீஸ் உரிமையை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட் டிரைலர் ரிலீஸ் தேதியில் நடந்த திடீர் மாற்றம்!