Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 வெளியாகிறது 'கோட்'!

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 வெளியாகிறது 'கோட்'!

J.Durai

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (13:07 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின் மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான 'கோட்' ('தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்') படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது.
 
இப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் தளபதி விஜய் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பிரபல நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், விடிவி கணேஷ், யுகேந்திரன் வாசுதேவன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், பார்வதி நாயர், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்) உள்ளிட்டோர் நடிக்கும் 'கோட்' படத்தில் மோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 
 
இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டு லைக்குகளையும் இதயங்களையும் இணையத்தில் அள்ளி வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இசை ரசிகர்கள் அனைவரையும் இப்பாடல்கள் கவர்ந்துள்ளன.  'கோட்' திரைப்படத்திற்காக முதல் இரண்டு பாடல்களை பாடி உள்ளார் தளபதி விஜய். 
 
மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படமான 'கோட்' திரைப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்துள்ளது. இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான வகையில் 'கோட்' உருவாகி உள்ளது. 
 
அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக சர்வதேச தரத்தில் உருவாகி உள்ள 'கோட்' படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சித்தார்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். 'ஜவான்', 'புஷ்பா' மற்றும் 'கல்கி' ஆகிய படங்களில் பணியாற்றிய ப்ரீத்தி ஷீல் சிங் டிசோசா மற்றும் குழுவினர் 'கோட்' திரைப்படத்தின் கேரக்டர் வடிவமைப்பு மற்றும் ஒப்பனையை செய்துள்ளனர்.
 
உடைகளை பல்லவி சிங் மற்றும் வாசுகி பாஸ்கர் வடிவமைத்துள்ளனர். பாடல் வரிகளை மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர். 
 
ராஜு சுந்தரம், சதீஷ், சேகர் உல்லி வி ஜே நடனம் அமைத்துள்ளனர். 
 
நிர்வாக தயாரிப்பு: எஸ். எம். வெங்கட் மாணிக்கம். அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவுக்கு மஞ்சும்மெல் பாய்ஸ் குழு இழப்பீடு வழங்கவில்லை: வழக்கறிஞர் விளக்கம்..!