சிம்புவுக்கு என்ன அவ்வளவு அதுப்பா? நஷ்டத்தில் ஞானவேல் ராஜா!

புதன், 9 அக்டோபர் 2019 (16:15 IST)
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சிம்புவால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
 
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ் குமாரின் மப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்த படத்தை தயாரிக்க ஸ்டுடியோ க்ரீன் முன்வந்தது. அதன் பின்னர் இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. 
 
இந்நிலையில், மப்டி படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். அந்த புகாரில், மப்டி படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு சரியாக வரவில்லை. 
இதனால் படத்தின் செலவு அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது என புகார் அளித்துள்ளார். 
 
சிம்பு ஒப்பந்தமான கான், மாநாடு படங்களை தொடர்ந்து இந்த படமும் டிராப் ஆகியுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் சிம்புவின் மூன்றாவது படம் கைவிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "நீயும் அங்கிருந்து வந்த ஆள் தானே" சிவகார்த்திகேயனை விளாசிய மீராமிதுன்!