Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வந்துட்டான்... வந்துட்டான்... வந்துட்டான்... சிம்பு ரிட்டன்ஸ்!

வந்துட்டான்... வந்துட்டான்... வந்துட்டான்... சிம்பு ரிட்டன்ஸ்!
, சனி, 28 செப்டம்பர் 2019 (12:51 IST)
நடிகர் சிம்புவின் புது கெட் அப் இணையத்தை கலக்கு கலக்கென்று கலக்கி வருகிறது. 
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து சிம்பு நிக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 
 
அவருடைய இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து, டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்க 'மகா மாநாடு' என்ற படம் தயாராக உள்ளது அறிவிப்புகள் வெளியானது. இதன் பின்னர் சிம்பு குறித்து எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை. 
webdunia
இந்நிலையை கடந்த பல வாரங்களாக வெளிநாட்டில் இருந்த சிம்பு தற்போது சென்னை திரும்பியுள்ளார். பேங்காக்கில் இருந்து வித்யாசமான புதிய கெட்டப்பில் வந்துள்ள அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 கோடி வசூல் செய்த கோமாளி – படக்குழுவினர் மகிழ்ச்சி !