Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருந்து கொடுத்து விமர்சனத்துக்குள்ளான நடிகர் விஜய்

Advertiesment
விருந்து கொடுத்து விமர்சனத்துக்குள்ளான நடிகர் விஜய்
, சனி, 4 நவம்பர் 2017 (11:42 IST)
அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளியன்று வெளிவந்தது. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், தேனாண்டாள் ஸ்டூடியோ சார்பில் முரளி ராமசாமி  தயாரித்திருந்தார்.

 
இந்நிலையில் ரூ.120 கோடியில் தயாரான இந்தப் படம் 200 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம்  வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் பல சிக்கல்களை சந்தித்தது. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வசூலைக்  குவித்து வருகிறது. 
 
இந்த வெற்றியை விஜய் விருந்து வைத்து கொண்டாடினார். படக்குழுவினர் அனைவரையும் தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். ஹீரோயின்களை தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர். பொதுவாக பார்ட்டிகளுக்கு போகாத ஏ.ஆர்.ரகுமானும் இதில் கலந்து கொண்டார். இயக்குனர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் கலந்து  கொண்டனர். படக்குழுவினருக்கு விஜய் விலை உயர்ந்த பரிசை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தத்தளிக்கின்றனர். இந்நிலையில் இந்த மெர்சல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில்  விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வி.வி. ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யும் ஓவியா ஆர்மி; நிறைவேறுமா ஆசை?