விஜய் நடித்த மெர்சல் தமிழில் மிகவும் அருமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. படமும் ரூ. 21௦ கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் தெலுங்கு பதிப்பிற்கு நீடித்த வந்த தடை தற்போது நீங்கியிருக்கிறது.
இப்படம் கடந்த வாரம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்கான சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர். இதனால் ஒரு வாரத்துக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை. படத்தில் ஜிஎஸ்டி வரிக்கு எதிரான வசனங்கள் இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை குழு சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பதாக கூறப்பட்டது.
இதனை தணிக்கை குழு தலைவர் மறுத்தார். இந்த நிலையில் நேற்று தணிக்கை குழு மெர்சல் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் உறுதிபடுத்தியிருப்பதோடு தணிக்கை சான்றிதழையும் வெளியிட்டுள்ளார். இதனால் தெலுங்கு மெர்சல் வருகிற 10ந் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.
தமிழை போல தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வர வேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.