நீதிமன்றம் என்னுடைய ஜாதி குறித்து பேசுபவர்களை தண்டிக்க வேண்டுமென பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார் இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது
என்னை திட்டி ட்ரோல் செய்து என்னை புண்படுத்த நினைக்கிறீர்கள்.. என்னை விமர்சி.. எனக்கு கவலை இல்லை... என்னை பற்றி பேச திமுக உபிகள் ஏன் என் ஜாதியை பயன்படுத்துகிறது? இது சரியா? இதுதான் சமூக நீதி மற்றும் சமத்துவமா? நீதிமன்றம் இதைக் கண்டிக்க வேண்டும், இதை அனுமதிக்கக் கூடாது.
என் மீது பயன்படுத்தப்படும் வார்த்தைகள்- பரப்பன, பாப்பாத்தி, மாமி, நூலிபன், cross belt, கோமுத்ரா, ஐயர் இன்னும் பல என் சாதியை கேலி செய்யும் பெயர்கள். ஏன்? அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை வழங்கியவர்களால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்