Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை: ‘அன்புசெல்வன்’ படம் குறித்து கவுதம் மேனன்!

நான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை: ‘அன்புசெல்வன்’ படம் குறித்து கவுதம் மேனன்!
, புதன், 3 நவம்பர் 2021 (12:44 IST)
கௌதம் மேனன் நடிக்கும் அன்புச்செல்வன் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என கவுதம் மேனன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கௌதம் மேனன் நடிப்பில் வினோத் குமார் இயக்கத்தில் அன்பு செல்வன் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த கௌதம் மேனன் இப்படி ஒரு படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் இந்த இயக்குனர் தான் நேரில் பார்த்ததுகூட இல்லை என்றும் இவ்வாறு எப்படி புரமோஷன் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அன்புச்செல்வன் படத்தின் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் உள்பட பல பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் புரமோஷன் செய்துள்ள நிலையில் திடீரென கவுதம் மேனன் இவ்வாறு அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதி கூட பாக்க முடியாதுன்னு நினைச்சேன்… ஆனா..? – ஜெய்பீம் பார்த்து வியந்த சூரி!