Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் விக்ரமன் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பல முன்னணிக் கலைஞர்கள்!

Advertiesment
இயக்குனர் விக்ரமன் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பல முன்னணிக் கலைஞர்கள்!
, வெள்ளி, 12 மே 2023 (07:45 IST)
90 களில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்  விக்ரமன். புதுவசந்தம், சூர்யவம்சம், பூவே உனக்காக மற்றும் வானத்தை போல என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் விக்ரமன். அவரின் பூவே உனக்காக படம்தான் விஜய்க்கு முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

ஆனால் 2000களுக்குப் பிறகு அவரின் கதைப்பாணி, ரசிகர்களுக்கு ஒவ்வாத ஒன்றாக மாற, அவரின் படங்கள் பெரியளவில் எடுபடவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் படம் இயக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவரின் மகன் விஜய் கனிஷ்காவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த படத்துக்கு ஹிட்லிஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் இந்த படத்தை அவரின் உதவியாளர் சூர்யகதிர் என்பவர் இயக்குகிறார். சரத்குமார் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது கௌதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்போது படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சைக்குரிய படத்திற்கு ரூ.25 கோடி அபராதமா? பிரபல நடிகர் விளக்கம்