Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் ரிலீஸாகிறதா நரகாசூரன்? ரசிகர்களை உற்சாகமாக்கிய செய்தி!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:46 IST)
கௌதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் ஓடிடி தளங்களில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் கௌதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் மூன்றாண்டுகளாக இந்தப் படம் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.

இது சம்மந்தமாக கார்த்திக் நரேனுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. ஆனாலும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கௌதம் மேனனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இப்போது படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக ரிலீஸாக உள்ளதை அடுத்து நரகாசூரன் படத்தையும் அப்படி ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம் கௌதம் மேனன்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments