Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'வலிமை இயக்குனரை சந்தித்த ‘மாஸ்டர்’ இயக்குனர்!

'வலிமை இயக்குனரை சந்தித்த ‘மாஸ்டர்’ இயக்குனர்!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (06:35 IST)
'வலிமை இயக்குனரை சந்தித்த ‘மாஸ்டர்’ இயக்குனர்!
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தை இயக்கி வரும் வைத்து எச்.வினோத்தும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
தமிழ் சினிமாவில் தற்போது நிறைய இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தெரிந்ததே. ரஜினி அஜித் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களை இயக்குவது இளம் இயக்குனர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தவர்கள் இயக்குனர்கள் வினோத் மட்டும் லோகேஷ் கனகராஜ் என்பது தெரிந்ததே. இருவரும் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களை இயக்கி பிஸியாக இருந்த நிலையில் நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்தனர்
 
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் மற்றும் எச்.வினோத் சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். வினோத் அண்ணா அவர்களுடன் நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்து சில நிமிடங்களை செலவு செய்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’தல’’அஜித்துக்காக வெயிட் பண்ணுவது ஒர்த் தான் ...பிரபலம் டுவீட்