Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுவரை நான் செய்யாத ஒன்றை ஜோஷ்வா படத்தில் செய்திருக்கிறேன் – கௌதம் மேனன்

இதுவரை நான் செய்யாத ஒன்றை ஜோஷ்வா படத்தில் செய்திருக்கிறேன் – கௌதம் மேனன்

vinoth

, திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:03 IST)
விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாக்க திட்டமிட்டிருந்த இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண்என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்கி முடித்தார். ஆனால் படம் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைத் தயாரித்துள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் “ஜோஷ்வா படத்தில் மொத்தம் 12 ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. இதுவரை நான் இயகிய எந்த படத்திலும் இவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள் இருந்ததில்லை. இந்த ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் யானிக் பென் இயக்கியுள்ளார். என் படங்களில் இருந்து ஜோஷ்வா முற்றிலும் வேறு ஒரு களம்” எனப் பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஷ்மிகா சென்ற விமானத்தில் கோளாறு! மயிரிழையில் உயிர் தப்பியதாக பதிவு!