Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் கட்சியில் இணைகிறாரா இயக்குனர் சமுத்திரக்கனி?

விஜய் கட்சியில் இணைகிறாரா இயக்குனர் சமுத்திரக்கனி?

vinoth

, வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (11:05 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் விரைவில் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சக திரைக் கலைஞரான சமுத்திரக்கனி விஜய் கட்சிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் “விஜய் நல்ல மனிதர். அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு. தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன். அவர் என்னை அழைக்கவில்லை என்றாலும் நல்ல விஷயத்துக்காக நானே செல்வேன்” எனக் கூறியுள்ளார். இதனால் சமுத்திரக்கனி விஜய்யின் கட்சியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மிரட்டிய மம்மூட்டி… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ‘பிரம்மயுகம்’