Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜு முருகன் வசனத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம்… பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ரிலீஸ்!

Advertiesment
ராஜு முருகன் வசனத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம்… பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ரிலீஸ்!

vinoth

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (12:09 IST)
மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆனவர் கௌதம் கார்த்திக். மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தாலும் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். கடைசியாக அவர் நடித்த 1947 மற்றும் பத்து தல ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தன.

சக நடிகையான மஞ்சிமாவைக் கரம்பிடித்த அவர் இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜு முருகனின் உதவி இயக்குனர் தினா ராகவன் இயக்க, ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு தற்காலிகமாக “GK 19” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் அரசியல் ஓவியங்கள் வரைவது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் படம் அரசியல் கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு வில்லன் ஆகும் அருண் விஜய்… பிரம்மாண்ட பட்ஜெட்டில் அடுத்த படம்!