சாய்பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான கார்கி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் கார்கி திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்ற கார்கி திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.  பரவலான வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் ஓடிடி மூலமாக இன்னும் அதிக ரசிகர்களை சென்று சேர வாய்ப்புள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்த திரைப்படம் இதுவரை தமிழ்ப்படங்கள் அதிகம் வெளியாகாத பெங்காலி மொழியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.