Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 68 படத்தில் பாடல் எழுதும் கங்கை அமரன்… லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி 68 படத்தில் பாடல் எழுதும் கங்கை அமரன்… லேட்டஸ்ட் அப்டேட்
, சனி, 9 டிசம்பர் 2023 (07:10 IST)
லியோ படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் இஸ்தான்புல்லில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தின் டைட்டில் ஜனவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு பாடலை பாடலாசிரியரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவன் வொண்டர் ஸ்டார் வுமன் சவுத் இந்தியா 2023 நிகழ்ச்சி