Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் விஜய் படத்தில் வாய்ப்பு… யுகேந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் விஜய் படத்தில் வாய்ப்பு… யுகேந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்!
, புதன், 6 டிசம்பர் 2023 (11:46 IST)
லியோ படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தின் டைட்டில் ஜனவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாடகரும் நடிகருமான யுகேந்திரன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் யூத் மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுகேந்திரன் பிக்பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராகக் கலந்துகொண்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கேர்ள்பிரண்ட் படத்தின் ஷூட்டிங்கில் ராஷ்மிகா!