Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2கே கிட்ஸை கவரும் விதமாக NEEK பட பாடல்கள் இருக்கும்... ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

2கே கிட்ஸை கவரும் விதமாக NEEK பட பாடல்கள் இருக்கும்... ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

vinoth

, திங்கள், 18 மார்ச் 2024 (14:18 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் –ஐ இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில்  தனுஷ் அடுத்து  ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஜி வி பிரகாஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனராம். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அவர்கள் இந்த பாடலில் நடித்துள்ளதாக, அந்த பாடலை படத்தின் ப்ரமோஷனுக்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பாடல்கள் பற்றி பேசியுள்ள ஜி வி பிரகாஷ் “நான் இளவயதில் இசையமைத்த மயக்கம் என்ன மற்றும் ராஜா ராணி போன்ற இளமை துள்ளலான பாடல்கள் கொண்ட படமாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இருக்கும். 2கே கிட்ஸைக் கவரும் விதமாக ப்ரஷ்ஷாக பாடல்களை உருவாக்கியுள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதிக் படத்துக்குப் பிறகு சினிமாவுக்கு பிரேக் விடும் அஜித்.. பைக் சுற்றுலாவை தொடர திட்டம்!