நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51 படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக இப்போது ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் தனுஷின் 50 ஆவது படமான ராயன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.