Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் சினிமாவில் படம் எடுத்து ரிலீஸ் செய்வது கடினமாக உள்ளது.. இயக்குனர் பா ரஞ்சித் வருத்தம்!

Advertiesment
Kingston tamil movie

vinoth

, வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (10:32 IST)
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி வருகிறது.  சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, படத்தைத் தொடங்கி வைத்தார். படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் உருவாகி வருவதாக சொலப்படுகிறது. இந்த படத்தை ஜி வி பிரகாஷின் ‘பேரலல் யூனிவர்ஸ் ‘ நிறுவனத்தோடு இணைந்து ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து கிராபிக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. படம் மார்ச் 7 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா ரஞ்சித் “தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் செய்வது கடினமானதாக உள்ளது.  சிறு பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிடுவது சிரமமானதாக உள்ளது.” என பேசியுள்ளார். பா ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள சிறு பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரேட்மார்க் சல்மான் கான் மாஸ் மசாலவாக ‘சிக்கந்தர்’ டீசர்!