Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிமாறன் இயக்கத்தில் கிரிக்கெட் கதைக்களத்தில் ஜி வி பிரகாஷ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் கிரிக்கெட் கதைக்களத்தில் ஜி வி பிரகாஷ்!
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:26 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள அடியே திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ள ஜி வி பிரகாஷ் ‘இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நான் கதாநாயகனாக நடிக்க இருந்த ஒரு படம் பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அந்த படம் கிரிக்கெட் பற்றிய கதைக்களம் உடையது. ஆனால் அப்போது இயக்குனர் வெற்றிமாறன் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தைத் தொடங்க முடியாமல் போனது” எனக் கூறியுள்ளார்.

வெற்றிமாறன் ஜி வி பிரகாஷ் இசைக் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய விருது பெற்றவர்களில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்!