Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவீனை வம்புக்கு இழுத்த ‘திரெளபதி’ இயக்குனர்

Advertiesment
நவீனை வம்புக்கு இழுத்த ‘திரெளபதி’ இயக்குனர்
, புதன், 4 மார்ச் 2020 (08:06 IST)
நவீனை வம்புக்கு இழுத்த ‘திரெளபதி’ இயக்குனர்!
சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஜி மோகன் அவர்கள் அவ்வப்போது தனது டுவிட்டரில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஒரு சில இயக்குனர்களை வம்புக்கிழுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
 
சமீபத்தில் பா ரஞ்சித் தனது ‘திரெளபதி’ படத்தை பார்த்து கருத்து கூற வேண்டுமென்றும், ஆணவகொலை படமான ’கன்னிமாடம்’ படத்தை பார்த்தது போல் தனது படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என்றும்  சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது மூடர்கூடம் இயக்குனரான நவீன அவர்கள் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: 
நவீன் அவர்களே, நீங்கள் திரெளபதி படத்தை பார்த்து நீங்கள் கூறும் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன்.  உங்கள் தவறை இப்போது ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .. கண்ணீர் விட்டபடி பாராசூட் மூலம் உயரத்தில் பறக்காதீர்கள் .. விபத்து ஏற்படக்கூடும் .. இனிமேல் கவனமாக இருங்கள் சகோதரரே .. என்று ஜி மோகன் குறிப்பிட்டுள்ளார்.
 
‘திரெளபதி’ படம் ஒரு சிலரைத்தவிர அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட படம் என்பதும், இந்த படம் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் எதற்காக அவர் தேவையில்லாமல் தன்னுடைய துறையில் உள்ளவர்களையே விளம்பரத்துக்காக வம்புக்கு இழுக்கிறார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படம் குறித்து நவீன், ஜீ மோகன் ஆகிய இருவரும் டுவிட்டரில் மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் நடந்தவற்றை போலீசில் கூறினேன்: கமல்