Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கோட்’ படத்திற்கு பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கிய ரசிகர்கள்.. அன்னதானமும் உண்டு..!

Advertiesment
Goat Poster

Siva

, புதன், 4 செப்டம்பர் 2024 (16:37 IST)
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் அன்னதானம் வழங்கிய நிலையில் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய கோட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் முதல் நாள் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ’கோட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அன்னதானம் செய்தனர். அதுமட்டுமின்றி அன்னதானத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு ’கோட்’ படத்தின் முதல் நாள் டிக்கெட்டையும் இலவசமாக அளித்தனர். இந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோட் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் ’கோட்’ திரைப்பட வெற்றி பெற அன்னதானம், முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று உணவு வழங்குதல் உட்பட பல்வேறு சமூக நல பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ‘கோட்’ தயாரிப்பாளர்.. என்ன காரணம்?