Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா பட இயக்குனர் மீது பெண் மோசடி புகார்.....

Advertiesment
நயன்தாரா பட இயக்குனர் மீது பெண்  மோசடி புகார்.....
, வியாழன், 8 ஜூன் 2023 (19:21 IST)
நயன்தாரா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் அறம். இப்படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது இயக்குனர் கோபி நயினார் மீது  இலங்கை சேர்ந்த பெண் தொழிலதிபர் சியாமளா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், அறம் படத்தை இயக்கிய கோபி நயனார், புதிதாக ஜெய் நடிப்பில் கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கவுள்ளதாக என்னிடம் கூறினார். இதை ஒரு தயாரிப்பாளரும் உறுதிப்படுத்தினார். எனவே, அப்படத்தில் என்னை தயாரிப்பாளராக இணைந்துகொண்டு, அதில், கிடைக்கும் வருவாயில்  25 சதவீதம் எனக்குத் தருவதாக கூறினார்கள். இதை நம்பி சென்னை வந்த நான் அவர்களிடம் ரூ.30 லட்சம் பணம் கொடுத்தேன்.

இப்படத்திற்குப் பூஜை போட்டார்கள், அந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்,. அதன்பின்னர் நான் பிரான்ஸ் நாடு சென்றுவிட்டேன். ஆனால்,  இப்படத்தை நிறுத்திவிட்டதாக கூறினர். நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

எனவே, என்னை ஏமாற்றி மோசடி செய்த ரூ.30 லட்சம் பணத்தை வசூல் செய்து தர வேண்டும் என்று அப்புகாரில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீதான வழக்கு....2 வாரம் அவகாசம் கேட்ட அரசு