தனுஷ், சிவகார்த்திகேயன் மோதலை அவர்கள் விரும்பவில்லை என்றாலும் காலம் அதனை முன்னின்று நடத்தும் போலிருக்கிறது.
தனுஷ் தனது பவர் பாண்டி படத்தை 2017 எப்ரல் 14 புத்தாண்டு தினத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். அதேநாளில் சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ராஜா தயாரிப்பு. படத்தை தொடங்கிய அன்றே, படம் 2017 ஆகஸ்ட் 25 விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என்று ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 14 பவர் பாண்டி வெளியாகும் அதே தினத்தில் அறிவிக்கப் போகிறார்களாம்.
அடுத்த வருடமும் இவர்களின் அக்கப்போர் தொடரும் போல.