Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச முன்வரவேண்டும் என கூறும் கத்ரீனா கைப்!!

Advertiesment
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச முன்வரவேண்டும் என கூறும் கத்ரீனா கைப்!!
, புதன், 7 டிசம்பர் 2016 (12:57 IST)
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தி நடிகை கத்ரீனா கைப், பெண்கள் வன்முறைகளை அமைதியாக சந்திக்க கூடாது. திருமண கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து பெண்கள் கட்டாயம் பேச வேண்டும். சில சமயங்களில், படித்த பெண்கள் கூட சமுதாய நெறிகள் காரணமாக உயிர் இழக்க நேரிடுகிறது.

 
திருமண கற்பழிப்பை குற்றம் என அங்கீகரிக்க பெரும்பாலான சமுதாயம் தவறுகிறது. இதுபற்றி ஏராளமான பெண்கள் பேச வேண்டும். பெண்கள் தங்களை தாழ்வாகவும், பலவீனமாகவும் கருதுவது சரி அல்ல. ஏனென்றால், நாம் பலவீனமான பாலினம் இல்லை. இந்த உலகம் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. மாநிலங்களில் பெண் முதல்-மந்திரிகளை கொண்ட ஒரு நாட்டில், பாலின வேறுபாடு நிகழ்வது வருத்தம் அளிக்கிறது.
 
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சம்பவங்கள் தினசரி நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். என்று கத்ரீனா கைப் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி - அமிதாப்பச்சன் இரங்கல் செய்தி