நடுராத்திரியில் முதல் ஷோ! ரிலீஸுக்கு முன்பே 15 கோடி வசூல்? - இந்தியாவை கலக்கும் Demon Slayer

Prasanth K
வியாழன், 11 செப்டம்பர் 2025 (16:19 IST)

ஜப்பானிய அனிமே திரைப்படமான Demon Slayer: Infinity Castle நாளை வெளியாக உள்ள நிலையில் ரிலீஸுக்கு முன்பே 15 கோடி ரூபாய் இந்தியாவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கொரோனா காலத்தில் இளைஞர்கள் வீடுகளில் முடங்கியிருந்த சமயத்தில் Naruto, One Piece, attack on titan என பல ஜப்பானிய அனிமே தொடர்கள் இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கின. அதை தொடர்ந்து பல இந்திய கார்ட்டூன் சேனல்கள் இந்த தொடர்களை இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடத் தொடங்கிய நிலையில் இந்தியாவில் ஜப்பானிய அனிமே படங்களுக்கு பெரும் ரசிகப்பட்டாளம் உருவாகியுள்ளது.

 

அப்படியாக இந்திய இளைஞர்களிடையே பெரிதும் பிரபலமாக உள்ள தொடர்தான் டீமன் ஸ்லேயர். இது முதலில் 4 சீசன்களுக்கு அனிமே தொடராக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்று பாகம் கொண்ட படமாக தயாராகியுள்ளது. இதன் முதல் பாகமான Demon slayers: Infinity Castle ஏற்கனவே ஜப்பானில் ரிலீஸாகி பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில் நாளை இந்தியாவில் வெளியாகிறது.

 

முதல்முறையாக நேரடியாக ஜப்பானிய மொழியில், ஆங்கில சப் டைட்டிலுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட மெட்ரோ சிட்டிகளில் மட்டுமல்லாது திருச்சி, தஞ்சாவூர் என சிறு நகரங்களில் படம் டிக்கெட்டுகள் ஓபனிங் செய்யப்பட்டு ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. இதன் தமிழ் டப்பிங் வெர்சனும் பல மாவட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

 

படத்திற்கு ஏராளமான வரவேற்பு இருப்பதால் மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் இன்று நள்ளிரவே முதல் காட்சி திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் நாள் மட்டும் இந்திய அளவில் 1 லட்சம் டிக்கெட்டுகளுக்கும் மேல் விற்றுள்ளதாகவும், வார இறுதிகளில் மொத்தமாக 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த படம் முக்கிய நகரங்களில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்படுவதால் படம் வெளியாகும் முன்னரே இதுவரையிலான வசூல் நிலவரம் ரூ.15 கோடியை தொட்டிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஜப்பானிய படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments