Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MTV Splitsvilla X5: அதிரடியாக நடைபெற்ற எலிமினேஷன்.. வெளியேறிய 3 போட்டியாளர்கள் யார்?

J.Durai
புதன், 1 மே 2024 (14:57 IST)
மும்பை: MTV Splitsvilla X5: ExSqueeze Me Please  ரியாலிட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 'Teen Tigda Kaam Bigda' போட்டி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதே போல உள்ளே போட்டி போட்டு வரும் 21 போட்டியாளர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சவால் ஏகப்பட்ட சுவாரசியங்கள் அடங்கிய உற்சாகத்துக்கு கொஞ்சமும் பஞ்சமின்றி ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்தாலும் அதைவிட நெஞ்சை உருக கூடிய பெரிய விஷயமாக எலிமினேஷனும் இந்த சுற்றில் நடைபெற்றுள்ளது.
 
11 பெண் போட்டியாளர்கள் மற்றும் 10 ஆண் போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடும் இந்தியாவின் டேட்டிங் நிகழ்ச்சியான MTV Splitsvilla X5: ExSqueeze Me Please  ஐந்தாவது சீசன் பரபரப்பாக எம் டிவி மற்றும் ஓடிடி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
 
டேட்டிங் ரியாலிட்டி ஷோ: இளமைத் துள்ளலுடன் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில் மிஸ்டரி பாக்ஸ் உள்ளிட்ட விஷயங்கள்  விளையாட்டின் விறுவிறுப்பை கூட்டி உள்ளன. ஒரு வில்லாவில் போட்டியாளர்கள் தங்களுக்கான இணையை கவர்வதற்காக நடத்தும் காதல், மோதல் யுத்தங்களின் வழியே இளம் ரசிகர்களை இந்த நிகழ்ச்சி கவர்ந்து வருகிறது.
 
3 பேர் எலிமினேஷன்: முதல் முறையாக நடைபெற்ற எலிமினேஷனில் 3 பேர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரிக்கா, நிதி மற்றும் ராகுல் உள்ளிட்ட மூன்று பேர் MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளனர். தனுஜ் இந்த மூவரையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது மற்றும் மிஸ்சீஃப்பான உர்ஃபி ஜாவேத்தின் தந்திரங்கள் இவர்கள் 3 பேரையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து அப்புறப்படுத்த உதவியுள்ளது.
 
சூடு பிடித்த ஆட்டம்: வில்லாவில் நடைபெற்ற ரியாலிட்டி டேட்டிங் விளையாட்டில் இருந்து ரியல் லைஃப்புக்கு இவர்கள் மூன்று பேரும் தற்போது திரும்பி உள்ளனர். 21 பேரில் 3 பேர் வெளியேறியுள்ள நிலையில், மீதம் உள்ள 18 பேருடன் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. காதல் விளையாட்டில் பொறாமை, வஞ்சம், வெளியேற்றும் யுக்தி உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்டு போட்டியாளர்கள் இன்னமும் வெறித்தனமாக விளையாடுவதை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 7 மணிக்கு எம் டிவி மற்றும் ஜியோ சினிமாவிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments